இதயங்கள் அன்பால் இணைந்திட " அரும்புகள் மலரும் ஓசைகள் " தேனிலும் இனிதாய் ஒலித்தது.. இயற்கை தந்த இசை எழிலுடன் இன்பத்தமிழின் ஊற்றாய் அரும்புகள் மலரும் ஓசைகள் தேனிலும் இனிதாய் காதினில் ஒலித்தது.
( 01-11-2025 ) அன்று சனிக்கிழமை மாலை கனடா கந்த சுவாமி ஆலய மண்டபத்தில் இடம் பெற்ற தளிரின் 13 ஆவது ஆண்டு விழாவும் "அரும்புகள் மலரும் ஓசைகள் " இசை நிகழ்வும் புதிய மூன்று பாடல்கள் வெளியீட்டுடன் வரலாற்று பெருமைகளுடன் வெற்றி நிகழ்வானது. பிரபல பின்னனிப் பாடகரான தமிழிசைச் செல்வன் வி.எம்.மகாலிங்கம், பிரபல தென் இந்திய இசை அமைப்பாளர் பரத்பாஜ் அவர்களின் மகள் திரையிசைப் பின்னணிப் பாடகர் ஜனணி கார்த்திக் அவர்களுடனும் இசைக் கலைஞன் ஜெயச்சந்திரன் பெற்றெடுத்த இசை அமைப்பு ஆரோசை குழுவின் இனிதான இசையும் இசைக்கலைஞன் சுதர்சனின் நெறியாள்கையின் ஒலியமைப்பும் அரங்கை நனைத்திட சி.சிவமோகன்( தளிர் பிரதம ஆசிரியரின் வரிகளில் உருவான முத்தான மூன்று பாடல்கள் வி.எம் இசையில் அம்மா பாடல் மைதுசா முரளிதரன் குரலிசையுடன் சைந்தவி ( திரையிசைப் பின்னனிப் பாடகி ) இணைந்திட தமிழ் அழகன் முருகன் பாடல் பார்கவி பாலமுரளி குரலிசையும் வி.எம்.மகாலிங்கம் ( திரையிசைப் பின்னணிப் பாடகர் ) இறையிசையில் நனைந்திட காதல் ஓவியமும் காற்றிடை இசையினில் விழிகள் பேசிட ஜோஆன்சா சுரேன் குரலிசையுடன் உன்னிமேனன் ( திரையிசைப் பின்னனிப் பாடகர் ) பாடலும் இதயத்தினை தொட்டு அலங்கரிக்க அரங்கம் நிறைந்த அவையுடன் அன்பினைப் பொழிந்திடும் அரும்புகள் இசையினை வழங்கிட பிரதம விருந்தினர்களாக நிகழ்வில் கலந்து கொண்ட கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் யுவனீற்றா நாதன் அவர்களின் பாராட்டுதல் பேச்சுடன் ரொறோன்ரோ நகரசபை உறுப்பினர் நீதன் சான் ஆகியோரின் வாழ்த்துரைகளுடனும் தளிர் பிரதம ஆலோசகர் தமிழ்ப் பேரொளி பேராசிரியர் இ.பாலசுந்தரம் அவர்களின் தளிர் உரைகளுடனும் , மாவிலி மைந்தன் சண்முகராஜா, தமிழர் தேசிய அவையின் ஊடகப் பேச்சாளர் தேவா சபாபதி, டாக்டர் போல் யோசப் ( தளிர் பிரதம ஆலோசகர் ) ஆகியோரின் பாடல்கள் விமர்சனங்களுடனும் திருமதி.செல்வா அருள்ராஜசிங்கம், திருமதி பாலசுந்தரம், தளிர் குழுமத்தின் தலைவர் தாஸ் சண்முகலிங்கம் ,கவிதா தாஸ் மற்றும் தளிர் முரளிதரன் நடராஜா, தளிர் பாலமுரளி பேபிகிருஷ்ணன் தளிர் சுரேன் பீற்றர் விஜயரெட்னம் ஆகியோரின் அன்பின் பேராதரவுடனும் தளிர் உறுப்பினர்களான மலர், பிரபா, கஜேந்தினி , பாலகுமரன், சீனு , அன்று , சிறி , ரகு , நந்தினி , ரேகா ஆகியோரின் நிகழ்வு ஒழுங்கமைப்புடனும் நிகழ்வுக்கு வருகை தந்த அன்புள்ளங்களை வரவேற்ற தளிர் சுருதி, மற்றும் அழகு தமிழிலும் அன்பு மொழி ஆங்கிலத்திலும் நிகழ்வினை கை தட்டுங்கப்பா என தூண்டில் போட்டு நெஞ்சங்களை சுண்டி இழுத்த இளம் தொகுப்பாளினிகளான பூஜா தாஸ், கம்சா சாந்தகுமார் ஆகியோரின் நிகழ்ச்சி தொகுப்புக்களுடனும் தளிரின் அரும்புகள் மலரும் ஓசைகள் நிகழ்வின் பிரதான அனுசரனையினை வழங்கிய குயீன் பேலஸ் உரிமையாளர்களான வசந்த் & தீபா அவர்களின் அன்புடனும் நிகழ்வு நடை பெற மண்டப ஒழுங்கினை சிறந்த முறையில் ஒழுங்கு செய்து தமது ஆதரவினை வழங்கிய கனடா கந்தசுவாமி ஆலயத்தின் தலைவர் முத்து அவர்களின் ஆதரவும் மற்றும் அரும்புகள் மலரும் இசை நிகழ்வினை ஊடகவாயிலாக பதிவேற்றிய ரொறோன்ரோவின் முன்னனி தமிழ் ஊடகங்களான உதயன் பத்திரிகை ஆசிரியர் லோகேந்திரலிங்கம் அவர்களின் அன்புரையும், வழிகாட்டும் தமிழரின் அடையாளமான செந்தி செல்லையா தமிழன் வழிகாட்டி , மற்றும் பிகைன் மீ மீடியா , வண்ணப் புகைப்படங்களை பலவடிவங்களாக்கும் ரவி அச்சுதன் மற்றும் ஐயா4u பேரின்பநாதன், கிருஸ்னலிங்கம் ஆகியோரின் ஊடக ஆதரவுடனும் நிகழ்வுக்கு அனுசரணை வழங்கிய வர்த்தக நிறுவனர்கள் மற்றும் சகல வழிகளிலும் ஆதரவு வழங்கி அன்புக்கரம் கொடுத்த அனைவரது ஒத்துழைப்போடும் அரும்புகள் மலரும் ஓசைகள் மாபெரும் விழாக்கோலத்துடன் தளிரின் 2025 ஆண்டில் வரலாற்று நிகழ்வானது. ( படங்களுடன் வாழையூரான் )
சுலோசனா பூவிலிங்கம் இறைவனடி சேர்ந்தார்...
ஆறுமுகம் மனோன்மணி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி..
Latest updates and news