உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு பிற்பகல் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவர் அடங்கிய நிரந்தர தீர்ப்பாயம் முன்பாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நௌபர் மௌலவி உள்ளிட்ட 24 சந்தேக நபர்களும் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர். இந்நிலையில் நண்பகல் அளவில் வழக்கின் நடவடிக்கைகள் ஆரம்பமானது. அதன்போது ஊடகவியலாளர்களுக்கு நீதிமன்றத்திற்குள் பிரவேசிக்க அனுமதி மறுக்கப்பட்டது. முன்னதாக நீதிமன்ற பதிவாளருக்கு அறிவித்து அனுமதி பெற்றிருந்த ஊடகவியலாளர்களுக்கும் உள்ளே செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. அதன் பின்னர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று பிற்பகல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பகல் போசன இடைவேளையின் பின்னர் மேல்நீதிமன்ற நிரந்தர தீர்ப்பாயம் நண்பகல் 1.45 மணியளவில் மீண்டும் தங்கள் செயற்பாடுகளைத் தொடங்கவுள்ளதாக அறிவித்து நீதிமன்ற நடவடிக்கைகளை ஒத்தி வைத்துள்ளனர்.
சுலோசனா பூவிலிங்கம் இறைவனடி சேர்ந்தார்...
ஆறுமுகம் மனோன்மணி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி..
Latest updates and news