img img img img img img img img img img img img img img

செய்திகள் >> இலங்கை செய்திகள்

நாமலுக்கு இலஞ்சம் வழங்கிய விவகாரம்... முக்கிய நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் கைது...

  
 


கிரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் சானகி சிறிவர்தன இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த ஆணைக்குழுவின் (CIABOC) விசேட விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் அவர் இன்று (24) காலை கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நிறுவனத்திற்காக, நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான கொழும்பு கோட்டை "டிரான்ஸ்வொர்க் சதுக்கம்" (Transworks Square) நிலத்தை விரைவாகப் பெற்றுக்கொள்வதற்கு உதவுவதற்காக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராசபக்சவுக்கு 70 மில்லியன் ரூபாயை இலஞ்சமாகக் வழங்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை சானகி சிறிவர்தன இந்த 70 மில்லியன் ரூபாய் பணத்தை மூன்று தனித்தனி சந்தர்ப்பங்களில் நாமல் ராசபக்சவுக்கு வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (24) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தது.

தாய் என்ற சொல்லில் பகை ஏதும் இல்லை தாய் இன்றி மண்ணில் உயிர் ஏதும் இல்லை கண் கண்ட தெய்வம் உயிர் தந்த அன்னை
தளிர் ஆசிரியர் சிவலிங்கம் சிவமோகன் அவர்களின் வரிகளில் உருவான "தமிழீழத்தின் உயிர் எழுத்து" .. பாடல்: பின்னணி பாடகர் தமிழிசைச் செல்வன் வி.எம்.மகாலிங்கம்
வருகிறாள் தமிழ் மகள் மீண்டும் வருகிறாள்.
பாடல் வரிகள்: தளிர் பிரதம ஆசிரியர் சிவமோகன் பின்னணி பாடகர்: தமிழிசைச்செல்வன் வி.எம்.மகாலிங்கம் பாடகி: கனேடிய முன்னணி பாடகி சுரபி யோகநாதன்
தளிர் பிரதம ஆசிரியர் சி.சிவமோகன் வரிகளில் உருவான பாடல் இதனை பாடியவர்கள் பிரபல திரைப்பட பாடகர் கரிசு ராகவேந்தர் மற்றும் கனேடிய பாடகி மதுசா தாசன் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.தளிரின் 10 ஆவது ஆண்டின் வெளியீடாக இப்பாடல் வெளியிடப்பட்டது.
பாடல் : வங்ககடலலையே வாகரை மணல் மேடுகளே.... பாடல் வரி : தளிர் ஆசிரியர் சி.சிவமோகன். இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D., பாடகர்கள் : உன்னி கிருசுணன், கனிசா ராசேந்திரகுமார்.
 
img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img