கூர்மையான ஆயுதத்தால் தாக்கி, தாயைக் கொலை செய்துவிட்டு அவரது மகன் உயிரைமாய்த்துக்கொண்ட சம்பவம் வவுனியா, தோணிக்கல் பகுதியில் ஒன்று இடம்பெற்றுள்ளது. காவல்துறையின் விசாரணைப்படி வாக்குவாதம் முற்றியதன் காரணமாக மகன் தனது தாயை கூர்மையான ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் தாயைக் கொலை செய்த பின்னர், மகன் அதே வீட்டில் அருகிலுள்ள அறையில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் வவுனியா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சுலோசனா பூவிலிங்கம் இறைவனடி சேர்ந்தார்...
ஆறுமுகம் மனோன்மணி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி..
Latest updates and news